2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், விஜய் விரைவில் மக்களை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் மூலம் விஜய் மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கை பற்றிய தகவல்கள் கட்சியின் முதல் மாநாட்டில் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ,2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது. இடையில் வரும் மற்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.