கென்யாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கென்யாவின் நாடாளுமன்றத்தின் வரி முன்மொழிவுகளை எதிர்த்து முற்றுகையிட்டதுடன் கட்டிடத்தின் ஒரு பகுதியை எரித்துள்ளதுடன் எதிர்ப்பாளர்கள் தப்பியோடிய நிலையில் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டமூலத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்களின் பின்னணியில் சிலா் இருப்பதாக இலங்கைக்கான கென்யா உயர்ஸ்தானிகர் கனகநாதன்தெரிவித்தார்.
எமது அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தொிவித்த அவா் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.