மலேசியா – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டடு 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்னிலையில் இதனை சுவாசித்தவர்களிடம் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 39 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான பயணங்களுக்கு வந்த பயணிகள் யாரும் இதில் பாதிகப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் எரிவாயு கசிவு ஏற்பட்ட உடனேயே, தீயணைப்பு குழுக்கள் விமான நிலையத்திற்கு அழைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.