கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி சந்தேக நபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜூலை 08 அன்று அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்ற வர்த்தகர் கொல்லப்பட்டார்.
மேலும் பிரபல பாடகி கே. சுஜீவவின் கணவர் நயனா வசுலாவும் உயிரிழந்துள்ளதுடன், கே.சுஜீவா, கிளப் வசந்தாவின் மனைவி, மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.