பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.