முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மேலும் மூன்று மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஏழாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் நேற்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது
இரண்டு கட்ட ஆகழ்வின் போது அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது நேற்று முன்தினம் ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மூன்று சடலங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று மனித எச்சங்கள் தற்போது முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 43 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து பற்கள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.