தேர்தலுக்குத் தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் தேர்தல் பணிக்கு தேவையான அழியாத மை, புகைப்பட நகல் மற்றும் அச்சுக் காகிதம், அச்சிடப்பட்ட மற்றும் தரவு அச்சிடப்பட்ட எழுதுபொருட்கள், இதர எழுதுபொருட்களுக்கு விலை மனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் போட்டி முறையில் அழைக்கப்பட்ட விலைமனுக்கள் அடுத்தமாதம் 02 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.