ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை வடிவமைக்கும் பொறுப்பு இன்று அரசாங்க அச்சகத்திடம் கையளிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 39 ஆக பதிவாகியுள்ளது.
இதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டை விட இந்த வருட வாக்குச் சீட்டு சற்று நீளமாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.