தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அத்தனகலு மற்றும் உறுவல் ஓயா ஆகிய இடங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்கமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
இதுவரை பெய்த மழையால் , கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் ஆற்றின் படுகை மிகவும் ஈரப்பததத்துடன் உள்ளதாகவும் அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயா நீரோடைகளில் இன்று கணிசமான மழைவீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் ஆற்றுப் படுகை இலகுவாக குறிப்பிடத்தக்க உயர் வெள்ள நிலைமையாக மாறும் அபாயம் உள்ளதாகவும் இதனால், இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களுகங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் மில்லகந்த பிரதேசத்தில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.