அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
அதன்படி, நேற்று 296.92 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 296.08 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமின்றி 305.36 ரூபா என்ற ரீதியில் உள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு நாட்டு நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.