இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 10 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த 22 மீனவர்களில் 10 மீனவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது