லண்டனின் ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில், போக்குவரத்தை தடை செய்யும் திட்டங்களை நகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் வர்த்தகர்கள்,குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த முடியும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.
இத் திட்டத்திற்கு சுமார் 150 மில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்ஸ்போர்ட் தெரு உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாகும், அன்றாடம் சுமார் அரை மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.