”கோட்டாவின் ஆட்சியானது சூழ்ச்சிகள் மூலமே வீழ்த்தப்பட்டுள்ளதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று திஸ்ஸமகாராம பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நல்லாட்சி காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போராட்டத்தின் பின்னர் நாம் ஓடி ஒழிந்துவிட்டதாக பலரும் கூறினார்கள்.
நாம் மக்களுடன் தான் அன்றும் இருந்தோம். உலகிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் செல்ல நாம் தயார். நாம் பிழையானவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க தயாராகவே உள்ளேன்.
கோட்டாவின் ஆட்சியை சூழ்சியின் ஊடாக வீழ்த்தினார்கள். நாம் குறைகளை நிவர்த்தி செய்ய தயாராகவே உள்ளோம். நாட்டை பிளவுப்படுத்தவோ மக்களை பாதிப்படையச் செய்யவோ நாம் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை”இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.