”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய கொடுவேகொட விவேகாராம புராண விகாரையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.
தேர்தல் சட்டவிதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஜனநாயகத்தினை வெற்றிபெற செய்ய வேண்டும்.
சமாதானத்துடனும் நட்புடனும் செயற்பட்டு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதனை உறுதிசெய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.