பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அச்சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 29 ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது