கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ், கஞ்சாவுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானியர் என இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள், விமான நிலையத்தின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.