முச்சக்கரவண்டி கட்டணங்கள் இன்று முதல் திருத்தம் செய்யப்படவுள்ளது என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணம் மாறாது என்பதுடன், இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து 85 ரூபா கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது