கம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப் பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த ஜீப் வண்டியானது வீதிக்கு அருகில் இருந்த வர்த்தகம் செய்யும் வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்றரை வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.