மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் விரைவு புகையிரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் திம்பிரியகெதர நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

















