மும்பையில் இருந்து நியூயோர்க் சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து திங்கள்கிழமை (14) டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் சோதனை நடைபெற்று வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் புறப்பட்ட AI119 என்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து, இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் அது டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
இதேவேளை, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து தரமான பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.