மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சென்று வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் துவிச்சக்கர வண்டி செலுத்துனரும் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்களின் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாரதி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.