முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும், நிரபராதியாக அரசியலுக்குத் திரும்புவேன் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.