கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ரோந்து ஏற்பாடுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.
இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையேயான அண்மைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்திய விவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த தகவலை திங்களன்று (21) அறிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருகை தருவதற்கு முன்னதாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி,
சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் விளைவாக இந்தியா – சீனா எல்லைப் பகுதிகளில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக ரோந்து ஏற்பாடுகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.
கிழக்கு லடாக் எல்லையில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் இருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக உள்ளன.
இந்த மோதலின் விளைவாக 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.