மன்னார் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று(24) காலை வரை பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம்,சௌதார்,எழுத்தூர் இமூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.