எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கு தபால் மூல வாக்களிப்பதற்காக 1,576 அரச ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசர நிலை ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேவை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 600 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வாக்குப்பெட்டிகள் இன்று காலை விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் எனவும், இரவு 10 மணிக்குள் வாக்குகளின் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் காலி மாவட்ட செயலாளர் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.