காலி -எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு இன்று நண்பகல் 12 மணியளவில் 40% நிறைவடைந்துள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்
அதன்படி எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை 47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுகொண்டு இருக்கின்றது
இந்த வருடம் நடைபெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு 28 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதற்கென 55,643 வாக்காளர்கள் பதிவுசெய்துள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளும் சுயேச்சைக் குழுவும் இம்முறை போட்டியிடுகின்றன.
அத்துடன் வாக்குப்பதிவு தற்போது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறதுடன் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளதுடன் தேர்தல் கடமைகளுக்காக 600 அரச உத்தியோகத்தர்களும் 500 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார்.