எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார்.
வாக்குப் பதிவுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் 4 மணிக்குப் பின்னர் வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 55,643 ஆகும். என்றும் அவர் குறிப்பிட்டார்