அந்தவகையில் இன்றைய தினம் ”அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு” என்ற தலைப்பில் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான், கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ், பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளதோடு, ரஞ்சன் ராமநாயகவுக்கு உற்சாக வரவேற்பளித்து தமது ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான நேரடி ஒளிபரப்பு ஆதவன் தொலைக்காட்சி மற்றும் எமது சகோதர தொலைக்காட்சியான சுவர்ணவாஹிணியிலும் ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.