அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சிப்பதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சமன் வன்னியாராச்சிகே தெரிவித்துள்ளார்
சுமார் நூறு அமைச்சர்கள் இருந்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க முடியாதவர்கள், மூன்று அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய போது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
அத்துடன் இப்போது சிலர் தேசிய பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து பேசுகிறார்கள், என்றும் வங்கரோத்தான எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் மத்தியில் இக்கதை பரவலாக பேசப்பட்டு வருகிறது, காரணம் நாட்டை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவேயாகும் என அவர் தெரிவித்தார்
அதே போல அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு பயணத்தடை விதிக்கவில்லை. வெறும் எச்சரிக்கை மட்டுமேயிட்டது, ஆகவே அதனையிட்டு நாங்கள் குழப்பம் அடையத் தேவையில்லை என்றும்
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
இந்த எதிர்கட்சிகள் சொல்வது போல் புலனாய்வுத் தகவல்களை வெளியிட வேண்டுமா?
புலனாய்வு அறிக்கையை தினமும் படிக்க வேண்டுமா? அல்லது முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களில் புலனாய்வுத் தகவல்களை சொல்ல விரும்புகிறீர்களா? எனவும் அவர் கேள்வியுள்ளார்
மேலும் இன்றைய நிலையில் ஐம்பது பேரைக் கூட கூட்டங்களுக்கு வரவழைக்க முடியாத குழுக்கள் மீண்டும் இனவாதக் குரலைக் கொண்டுவர முயற்சிக்கின்றன என இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சமன் வன்னியாராச்சிகே மேலும் தெரிவித்திருந்தார்