வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 பணியாளர்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 சுற்றுலாப் பயணிகளுடன் எகிப்தின் கடலோர நகரமான மார்சா ஆலமின் தெற்கில் படகு மூழ்கியது.
ஒரு “பெரிய அலை” படகு மீது மோதியதாகவும், சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் படகு கவிழ்ந்ததாகவும், சில பயணிகள் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் செங்கடல் பிராந்தியத்தின் ஆளுநர் அம்ர் ஹனா கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட சில சுற்றுலா பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் அனுப்பி வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
நான்கு அடுக்கு மோட்டார் படகு மூழ்கியதற்கு உறுதியான காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை.