யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 178 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 79 பாதுகாப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 136 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 342 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.