பெருமாளின் சிறிய திருவடி என போற்றப்படும் ஹனுமன், ராமரின் பெருமைகளை கூறும் ராமாயணத்தில் சுந்தர காண்டம் பகுதியின் நாயகனாக விளங்குபவர்.
ராம சேவைக்காக கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியை கூட வேண்டாம் என மறுத்து, தற்போது வரை இந்த பூமியிலேயே விடாமல் ராம நாமம் ஜபித்த படி, ராம பக்தர்களை காத்து அருள் செய்து வருகிறார்.
ராம நாமத்தின் மகிமையை உலகிற்கு உணர்த்தியவர் ஹனுமன். தீவிர ராம பக்தனான ஹனுமன், நித்திய சிரஞ்ஜீவி வரம் பெற்றதால் இந்த கலியுகத்திலும் பிரத்யட்ச தெய்வமாக இருந்து வருகிறார்கள்.
எங்கெல்லாம் ராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் தானாக வந்து, அவரும் ராம நாமத்தை பாராயணம் செய்வார் என்பது ஆன்றோர் வாக்கு.
பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை இது.
ராம நாமம் உச்சரிப்பவர்களை அனுமன் ஓடி வந்து காப்பார், அவர்களின் துன்பங்களை போக்கி, அனைத்து விதமான நலன்களையும் வழங்குவார் என்பது நம்பிக்கை.