ஜனவரி 20 அன்று நண்பகல் இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு – டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.
நாட்டின் 47 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பது பாரம்பரியத்திலிருந்து ஆடம்பரமான முறிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பதவியேற்பு நிகழ்வானது 2020 தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க முயன்ற கலகக்காரர்களால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெறுவது வழக்கம்.
எனினும், அங்கு நிலவும் கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும்.
பதவியேற்ப்பினை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவியேற்புடன் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார்.
அதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்.
உத்தியோகப்பூர்வ பதவியேற்பு விழா அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை (20) நண்பகல் 12.00 ET (1700 GMT) மணிக்கு நடைபெறும்.
பதவியேற்பு விழாவைக் காண முதல்முறையாக வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி போன்ற பழமைவாத உலக தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்துள்ளார்.
எனினும், பதவியேற்பு விழாவுக்காக இதுவரை எந்த நாட்டுத் தலைவர்களும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பதவியேற்ப்பு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (19) வொஷிங்டன் அரங்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய டொனால்ட் டிரம்ப்,
“மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதாகவும்” “எங்கள் எல்லைகள் மீதான படையெடுப்பை” தடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதேநேரம், பதவியேற்ற முதல் நாளில் குடியேற்றத்திற்கு கடுமையான வரம்புகளை விதிப்பதாகவும், தனது ஜனாதிபதி பிரச்சாரத்தின் மைய வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.
அதாவது, மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை அகற்றும் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் முயற்சியைத் தொடங்குவதற்கான தனது பிரச்சார உறுதிமொழியை டிரம்ப் மீண்டும் இதன்போது கூறினார்.