அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஒன்று கொழும்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் விலைப் பட்டியல் இன்றி பல்வேறு அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விலைப் பட்டியல் காண்பிக்கப் படாமைக்காக கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.