குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 வயதுச் சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவமொன்று புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவின் பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் 8 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் அவர்கள் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் கம்பளை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களில் 8 வயதான பாடசாலைச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.