இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்து தவிக்கும் இலங்கை, இதுவரை கண்டிராத டெஸ்ட் சரிவுக்கு பின்னர் மீண்டு வரும் ஆர்வத்துடன் இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
தொடக்க ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா, இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் மேன்மையை வெளிப்படுத்தியது.
தொடருடன், அவுஸ்திரேலியா தனது வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும், அதேவேளையில் இலங்கை மீண்டு வருவதற்கும், தமது சொந்த ரசிகர்கள் முன்னால் வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன,
இதில் அவுஸ்திரேலியா 21 போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் இலங்கை 5 போட்டிகளில் பெற்றது.
8 போட்டிகள் சமனிலையில் முடிந்துள்ளன.
அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 550 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை நெருங்கி வருகிறார்.
தற்போது 30.25 சராசரியுடன் 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவர் இன்று தொடங்கும் ஆட்டத்தில் இந்த இலக்கை எட்டினால், ஷேன் வோர்னுக்குப் பின்னர், இதுபோன்ற சாதனையைப் படைத்த இரண்டாவது அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
அதேநேரம், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்னவின் 100 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்தப் போட்டியுடன் அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறும் முடிவினை அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.