சுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட 35 வயதான நபர் ஸ்வீடிஷ் பிரஜை என்றும், அவரின் பெயர் ரிக்கார்ட் ஆண்டர்சன் (Rickard Andersson) என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செவ்வாயன்று (04) தாக்குதல் நடந்த ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 157 கிமீ (98 மைல்) தெலைவு நகரமான ஓரேபோவில் அமைந்துள்ள கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர் உட்பட 11 பேர் இறந்தனர், குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்றொரு பெண் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபராக ஆண்டர்சன் பெயரிடப்பட்ட ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்த பொலிஸார் மறுத்துவிட்டனர்.
ஓரேபோ பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் ஆனால் “விசாரணையின் காரணமாக அவரது பெயரை இன்னும் வெளியிடவில்லை” என்றும் கூறினார்.
அவர் எப்படி இறந்தார் என்றும் அவர்கள் கூறவில்லை, ஆனால் அவர் காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்றும் ஊடக அறிக்கைள் தெரிவிக்கின்றன.
ரிஸ்பெர்க்ஸ்கா கல்வி நிலையத்தை தாக்க துப்பாக்கிதாரி எதற்காகத் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து தாங்கள் இன்னும் விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்வீடிஷ் செய்தித்தாள் Aftonbladet சந்தேக நபர் முன்பு கல்வி நிலையத்தில் இணைந்தார், ஆனால் 2021 முதல் வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டது.
சந்தேக நபருக்கு தீவிரவாத கும்பல்களுடன் வெளிப்படையான தொடர்பு இல்லை என்றும், ஏனைய சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.
சந்தேகநபருக்கு எதிராக முந்தைய சிறைத் தண்டனைகள் மற்றும் வழக்குகள் எதுவும் இல்லை மற்றும் அவர் சட்டப்பூர்வமாக ஆயுதம் பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண கைரேகைகள், பல் பதிவுகள் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்தோருக்கான ஸ்வீடிஷ் மொழி வகுப்புகளை கல்வி நிலையம் வழங்குவதோடு, ஆரம்ப அல்லது இடைநிலைப் பள்ளியை முடிக்காத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வயது வந்தோருக்கான கல்வி நடவடிக்கையினை ரிஸ்பெர்க்ஸ்கா மையம் முன்னெடுத்து வந்தது.
துப்பாக்கிச் சூட்டின் பின்னர், ஓரேப்ரோ குடியிருப்பாளர்கள் கல்வி நிலையத்துக்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஓரேப்ரோவைச் சுற்றியுள்ள கொடிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசாங்க கட்டிடங்கள், நாடாளுமன்ற மற்றும் அரச மாளிகைகளிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.