உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புடனான ஒரு ஒப்பந்தத்தில் முன்னணி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர் (Jannik Sinner) மூன்று மாத தடையை ஏற்றுக்கொண்டார்.
அதேநேரம், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு தனது இரண்டு நேர்மறையான ஊக்கமருந்து சோதனைகளில் இருந்து என் மீது சுமத்தப்பட்டுள்ள குறித்த வழக்கை இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும் இத்தாலிய வீரர் சனிக்கிழமை (15) கூறினார்.
கடந்த 2024 மார்ச் மாதம் தடைசெய்யப்பட்ட அனபோலிக் ஸ்டீராய்டால் மருந்தை தற்செயலாக பயன்படுத்தியதாக தீர்ப்பளித்ததற்காக சின்னரை இடைநீக்கம் செய்ய வேண்டாம் என்று சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு நிறுவனம் கடந்த ஆண்டு எடுத்த முடிவை வாடா எதிர்த்தது.
சின்னரின் ஊக்கமருந்து மாதிரியில் ஊக்க மருந்து அளவுகள் ஒரு பயிற்சியாளர் செய்த மசாஜ் காரணமாக வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பயிற்சியாளர் தனது விரலில் ஏற்பட்ட காயத்துக்கு அந்த மருந்துப் பொருளைப் பயன்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற 23 வயதான இத்தாலிய வீரர், மூன்று மாத தடை உத்தரவால் எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் தவற விடமாட்டார்.
சீசனின் அடுத்த முக்கியப் போட்டியான பிரெஞ்ச் ஓபன் மே 25 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.