பிரபல தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் கை கோர்க்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இந் நிலையில் பிரபல தமிழ் இயக்குனரான பி. எஸ். மித்ரன், நடிகர் யாஷ்ஷுடன் இணையவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் படங்களை இயக்கிய பி. எஸ். மித்ரன் தற்போது சர்தார் – 2 படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன், சஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் எனவும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த திரைப்படத்தினைத் தொடர்ந்து, இயக்குனர் மித்திரன் நடிகர் யாஷைவைத்து திரைப்படமொன்றை எடுக்கவுள்ளார் எனவும், அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.