சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் இருந்து விலகிச் சென்ற முப்படை அதிகாரிகளை சட்டரீதியாக கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி நேற்று (19) வரை சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படையைச் சேர்ந்த 1,604 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவத்தினர் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும், 72 கடற்படை வீரர்களும் அடங்குவர்.