பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் ,சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டிருந்தார்
இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததார்
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த பெப்ரவரி 08 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது