ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலமானது இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று மாலை இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழகம் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பார்.
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பலமான இது 550 இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புராணங்களில் வேரூன்றிய இந்தப் பாலம், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தனுஷ்கோடியில் இருந்து ராம சேது கட்டுமானத்தைத் தொடங்கியதை ராமாயணம் விவரிக்கையில், ஆழமான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ராமேஸ்வரத்தை இந்திய பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம் 2.08 கி.மீ நீளமும், கடல் மட்டத்திலிருந்து 17 மீட்டர் உயரமும் கொண்டுள்ளதுடன், 143 தூண்களை கொண்டு அமைந்துள்ளது.
இதனால் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் பெரிய கப்பல்கள் சீராகச் செல்ல முடியும்.