வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் முதியவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்திருந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.