இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.