ஆஃப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு உதவப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஐக்கிய அரபு சிற்றரசு அரசாங்கம் ஆப்கானியர்களைத் திருப்பி அனுப்ப தொடங்கிவிட்டதாகவும் அமெரிக்காவிடம் அதுகுறித்து தெரிவித்ததாகவும் ஐக்கிய அரபு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆதரவு பெற்ற ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தைத் தலிபான் அமைப்பு கவிழ்த்ததைத் தொடர்ந்து காபூலிலிருந்து தப்பிய பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களைத் தற்காலிகமாகப் பராமரிக்க அமெரிக்காவின் நெருங்கிய பாதுகாப்பு பங்காளியான ஐக்கிய அரபு சிற்றரசுகள் அரசாங்கம் 2021ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது.
இதேவேளை, அபுதாபியில் அன்று முதல் ஏறக்குறைய 17,000 ஆஃப்கானியர்கள் தஞ்சம் புகுந்ததுடன் கிட்டத்தட்ட 30 ஆப்கானியர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக இருந்துள்ளது.
ஆஃப்கானிய அகதிகள் சிலரைத் தலிபானிடம் ஒப்படைப்பதற்கான ஆயத்த வேலைகளை ஐக்கிய அரபு சிற்றரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில்
“அவர்களைக் காப்பாற்ற இப்போதே முயற்சி செய்வேன்,” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ருத் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி அபுதாபியில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் வெளியுறவு அமைச்சுக்கான சிறப்பு ஆலோசகர் மேற்கொண்ட கலந்துரையாடலில், ஜூலை மாத தொடக்கத்தில் அகதிகளாக வந்தவர்களில் இரண்டு குடும்பங்கள் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் ஆஃப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.



















