• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
வெற்றி பெறுமா சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’?

வெற்றி பெறுமா சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’?

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/05
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மதராஸி.

இத்திரைப்படத்தில்  ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் சுதீப் இளமோன் இத்திரைப்படத்திற்கு ஒலியமைப்பு செய்துள்ளார்.

blank

இனி  மதராஸின் கதை குறித்து பார்க்கலாம் 

தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுப்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.  தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை புகுத்தும் நோக்கில் வட இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யூத் ஜம்வாலும், ஷபீர் கல்லரக்கலும் (‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர்) கொண்டு வருகிறார்கள்.

அதை தடுத்து நிறுத்த பொலிஸார்  முயற்சித்தும், அவர்களை மீறி துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் ஒரு தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைக்கிறார்கள். பொலிஸாரின் அதிரடி படையிலேயே சமூக விரோதிகளின் ஆதரவாளர்களும் இருந்து இந்த சதி செயல்களை அரங்கேற்றுகிறார்கள். இதற்கிடையில் காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயற்சிக்கும் சிவகார்த்திகேயனை வைத்து அந்த துப்பாக்கிகளை அழிக்க பொலிஸ் அதிகாரி பிஜு மேனன் முடிவு செய்கிறார்.

blank

அதன்படி அந்த தொழிற்சாலைக்குள் சாதாரண தொழிலாளியாக சிவகார்த்திகேயன் நுழைகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற உண்மை பொலிஸாருக்கு தெரிய வருகிறது.

தொழிற்சாலைக்கு செல்லும் சிவகார்த்திகேயன் வில்லன்களை கண்டும் அவர்களை கொலை செய்ய தயங்குகிறார். அதன் பிறகு என்ன ஆனது? பதுக்கி வைத்த துப்பாக்கிகளை சிவகார்த்திகேயன் அழித்தாரா, இல்லையா? என்பதே மீதி கதை.

அதிரடி ஆக்சனில் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து கலக்கி இருக்கிறார். தற்கொலைக்காக முயற்சிக்கும் போதெல்லாம் நகைச்சுவைக்கு ஆட்கள் இல்லையே என்ற குறையையும் போக்கியிருக்கிறார்.

blank

அழகாலும், யதார்த்த நடிப்பாலும் ருக்மினி வசந்த் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். வில்லன்களாக வித்யூத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் பயமுறுத்தி உள்ளனர். அனுபவ நடிப்பால் பிஜு மேனன் கவருகிறார்.

விக்ராந்தின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. இதர நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் கொடுத்த வேலைக்கு சிறப்பு சேர்த்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சுதீப் இளமோன் ஒளிப்பதிவு படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் மாயாஜாலம் செய்துள்ளார். அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். சில காட்சிகளை யூகிக்க முடிந்தாலும் பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. தொழிற்சாலையில் நடக்கும் சண்டை காட்சிகள் திக் திக் ரகம்.

சமூக பேரழிவுகளை தொடர்ந்து படங்களில் முன்னிறுத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த முறை துப்பாக்கி கலாசாரத்தை கையில் எடுத்துள்ளார். பரபரப்பான திருப்பம் நிறைந்த காட்சிகளாய் படத்தை இயக்கி மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: A.R.MurugadossAnirudhRukminiSivakarthikeyanVidyut
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

Next Post

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி நிதியம்

Related Posts

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

2026-09-17
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது!
JUST IN

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது!

2026-09-17
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது
இலங்கை

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

2026-09-17
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
இலங்கை

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

2026-09-17
Next Post
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து! தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி நிதியம்

இலங்கை விமானப்படை ஆட்சேர்ப்புக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை விமானப்படை ஆட்சேர்ப்புக்கான முக்கிய அறிவிப்பு!

செம்மணி  புதைகுழியின்   இன்றைய அகழ்வில்  05 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வில் 05 எலும்புக்கூடுகள் அடையாளம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

0
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

0
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

0
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

0
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.