இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது.
இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது.
அதில், விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள் பேருதவியாக உள்ளன.
இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள அன்விஷா செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி சி 62 ஏவுகணை மூலம் எதிர் வரும் 12ம் திகதி காலை 10:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்படுகிறது.
அன்விஷா செயற்கை கோளுடன் ஒரு ஐரோப்பிய செயற்கைக்கோள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், மொரீஷியஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட 18 சிறிய செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட உள்ளன என இஸ்ரோ கூறியுள்ளது.



















