சர்வதேசத் தடைகளை மீறிச் செயல்பட்ட (Marinera) மரைனேரா மற்றும் (M/T Sophia) எம்/டி சோபியா ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெற்றிகரமாகக் கைப்பற்றியது.
இந்தப் பாரிய நடவடிக்கையில், பிரித்தானியப் படைகள் கண்காணிப்பு மற்றும் ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு அமெரிக்காவிற்குத் துணையாக நின்றன.
பிடிபட்ட குறித்த கப்பல்கள் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தியதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
கப்பல்களைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அவை தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்ற போதிலும், வட அட்லாண்டிக் பகுதியில் வைத்து அவை மறிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நிழல் கப்பற்படைக்கு (Shadow Fleet) எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இதற்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தலைவர்கள் இந்த வெற்றியைக் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டாடுகின்றனர்.




















