புத்தாண்டு தினத்தன்று ( South Gloucestershire) தெற்கு குளோஸ்டர்ஷையரில் உள்ள ( Leyhill ) லெய்ஹில் திறந்தவெளி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மூன்று கைதிகளும் காவல்துறையினரால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட (Matthew Armstrong) மேத்யூ ஆம்ஸ்ட்ராங் என்பவர் (Warwickshire) வார்விக்ஷையர் பகுதியிலும், வன்முறைப் பின்னணி கொண்ட (Daniel Washbourne) டேனியல் வாஷ்பர்ன் (Bristol) பிரிஸ்டல் நகர மையத்திலும் கைதுசெய்யப்பட்டனர்.
தப்பிப்பதற்கு முந்தைய நாள் ஒரு வீட்டில் புகுந்து பணம் மற்றும் கைபேசியை திருடியதாக ஆம்ஸ்ட்ராங் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை தப்பிச் சென்ற மூன்றாவது நபர் ஒருவரும் சில நாட்களுக்குப் பின்னர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
பிடிபட்ட அனைவரும் தற்போது சட்டப்படியான காவலில் வைக்கப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் சிறை பாதுகாப்பு மற்றும் கைதிகளின் நடத்தை குறித்த முக்கியத் தகவல்களை வெளிப்படுத்துகிறது.




















