சுவிற்ஸர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் கெர்சர் நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் தகவலறிந்து குறித்த இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பஸ்ஸில் முழுவதுமாக பரவியிருந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.தீ வேகமாக பரவியதில் பஸ் முழுவதுமாக எரிந்துள்ளமை தெரியவருகிறது












